அமரிக்காவுக்கு போட்டியாக சீனா இலங்கையின் பாதுகாப்பு விடயங்களிலும் தமது செல்வாக்கை செலுத்த ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், காவல்துறையினருக்கான வாகனங்களை சீனா, இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் கீழ் இந்த அன்பளிப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த வாகனங்கள், ஜனாதிபதி மைத்ரிபாலவிடம் நேரடியாக நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.
இதுவரைக்காலமும் சீனா, இலங்கையில் முதலீடுகள் விடயத்தில் மாத்திரமே கவனம் செலுத்தி வந்தது.
எனினும் பாதுகாப்பு ஒத்துழைப்பே தற்போதைய சூழ்நிலையில் அவசியம் என்ற அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க