இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கதிர்காமம் நோக்கிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு; ஐவர் காயமடைந்துள்ளனர்

செல்ல கதிர்காமத்தில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

செல்ல கதிர்காமத்திலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற வேன் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், இரண்டு மரங்கள் மற்றும் பாரவூர்தியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேனின் சாரதி உட்பட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனையவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க