ஜோதிடம்

இன்றைய நாள் எப்படி (2024-01-29)

மேஷ ராசி

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும். சிவபெருமானை வழிபடு வது நன்று.

ரிஷப ராசி

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டிய நாள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ஷண்முகக் கடவுளை வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் குறையும்.

மிதுன ராசி

மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். விநாயகரை வழிபட தடைகள் விலகும்.

கடக ராசி

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. காரியங்க ளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய் வீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கும். வேங்கடேசபெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். அம்பிகை வழிபாடு நலம் தரும்.

கன்னி ராசி

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக் கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

துலா ராசி

தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். முருகப்பெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்குவது சிறப்பு.

விருச்சிக ராசி

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளில் நன்கு சிந்தித்து ஈடு படவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்க ளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

தனுசு ராசி

மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். விநாயகரை வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

மகர ராசி

முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். தாய்வழி உறவினர் களால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு சற்று கவலை தரும். வாழ்க்கைத் துணை கேட்டதை வாங்கித் தருவதன் மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட பல வகைகளில் நன்மைகள் ஏற்படும்.

கும்பராசி

இன்று நினைத்த காரியத்தை முடிப்பதில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வது ஆறுதல் தரும். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். நரசிம்மரை வழிபட கூடுதல் நன்மைகள் ஏற்படும்.

மீனராசி

அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் கேட்கும் உதவி யை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் பொருள்சேர்க்கையும் ஏற்படும். மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.

 

கருத்து தெரிவிக்க