சினிமாசினிமா

மீண்டும் ‘கட்டா குஸ்தி’ இயக்குனருடன் நடிகர் விஷ்ணு விஷால்!

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருந்த திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்துள்ளார் . இந்த படத்தையும் விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இப்படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க