சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் நாட்டில் இருந்து வெளியேறினார்.

பாகிஸ்தானில் மரணத்தண்டனையை எதிர்நோக்கியிருந்த கிறிஸ்தவ பெண், இன்று நாட்டை விட்டு வெளியேறினார்.
ஆசியா பிபி என்ற இந்தப்பெண், நாட்டில் இருந்து வெளியேறியமையை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட மரணத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றுக்கொண்டமையை அடுத்தே அவர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
2010ஆம் ஆண்டு நபிகள் நாயகத்தை குறைவாக பேசினார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவர் கனடாவுக்கு சென்றுள்ளதாக அவரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க