பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் ஜெய்ஷ் உல் அடல் பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தாக்குதலில் 2 சிறுவா்கள் உயிரிழந்ததோடு சிறுமிகள் 3 போ் காயமடைந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதனையடுத்து ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் குறியுள்ளது. ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் ஈரானில் இருந்து செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் ஆகிய இரண்டு பலூச் பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
பாகிஸ்தானின் விமானப்படை ஈரான் உள்ளே புகுந்து நடத்திய இந்த தாக்குதலில் இதில் பிரிவினைவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட வாய்புள்ளதுடன்பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவும் , அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க