இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

3 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பான 640,000 ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை பரிசீலித்தன் பின்னர், புதிதாக 300,000 குடும்பங்கள் அஸ்வெசுமவில் இணைவதற்கு தகுதி பெற்றுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

7 இலட்சம் அஸ்வெசும மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர், மேலும் 03 இலட்சம் குடும்பங்கள் புதிதாக அஸ்வெசும திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

அஸ்வெசும பலன்களைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த தவணை தொகை வழங்கப்படுவதற்கு முன்னர், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான தவணைகள் விரைவில் வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதோடு ஏறக்குறைய 11 இலட்சம் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை விரைவில் பரிசீலித்து நிறைவு செய்யப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Also Readஅஸ்வெசும நிவாரணத் திட்டம் விண்ணப்பங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு

 

 

கருத்து தெரிவிக்க