அழகு / ஆரோக்கியம்

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் எவ்வளவு நன்மைகளா?

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள  நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதிகப்படியான ஒக்ஸிஜன் கிடைப்பதால் நம் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பெரும்பாலான நபர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும்போது தான் தலைவலி ஏற்படுகிறது, அத்தகைய நபர்கள் தினமும் தண்ணீர் குடித்து வருவது நல்லது. குறிப்பாக காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் நபர்கள், சாப்பிடாமல் செல்வது வழக்கமாகிவிட்டது. இவர்கள்  தினமும் தண்ணீர் குடிக்கும் போது பசி எடுப்பது மற்றும் வயிற்றுப்புண் தொல்லையிலிருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் முகமும் பொலிவுடன் இருப்பதுடன், பருக்கள்  வருவதும் குறைந்துவிடும்.

Also Read: அருகம்புல் ஜூஸின் நன்மைகள்

Also Read: டிராகன் பழம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்குமாம்

Also Read: வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்!

கருத்து தெரிவிக்க