சினிமாசினிமா

விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்மஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதி, தற்போது நடித்துள்ள ‘மெரி கிறிஸ்மஸ்’ என்ற படத்தை ‘அந்தாதூன்’ படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பொலிவுட் நடிகை கத்ரீனா க்ஹைப்  நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், ராதிகா ஆப்தே, அஸ்வினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரீதம் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற 12-ம் திகதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியிருந்த நிலையில் இந்த படத்தின் ‘காணாத காதல்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை யுகபாரதி எழுத கார்த்திக் பாடியுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க