இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து சாதகமான தகவலை இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடன் மறுசீரமைப்பு முன்னணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டுக் கடனின் முதிர்ச்சியை நீடிக்கவும், அரசாங்க நிதி மீதான உடனடி அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கமாகக் கொண்ட உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் செயற்பாடு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடனை மறுசீரமைப்பதற்காக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஆகிய இரண்டுடனும் கொள்கையில் இலங்கை ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
ஏனைய தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், அவற்றிலும் இது போன்ற ஒப்பந்தங்கள் விரைவில் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க