Uncategorizedஜோதிடம்

பெண் எந்ததெந்த கிழமைகளில் ருதுவானால் என்ன பலன்!

ஒரு பெண் எந்ததெந்த கிழமைகளில் பருவம் அடைந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை ருதுவாகும் பெண்கள் அழகாக இருப்பார்கள். இரக்க மனம் கொண்டவர்கள். யார் மனமும் புண்படக்கூடாது என நினைப்பவர்கள். கணவன் இவர்கள் அன்புக்கு கட்டுப்படு வார்கள்! எல்லோரையும் எளிதில் நம்பி விடுவார்கள், ஏமாளித்தனமும் இருக்கும்.

திங்கட்கிழமை ருதுவாகும் பெண்கள் பெரும்பாலும் குளிர்ந்த உடலை கொண்டவர்களாக இருப்பார்கள். கற்பனை சக்திகள் அதிகம். மாதம் ஒதுங்கும் போது அதிக வலி இருக்கும். இவர்களின் பேரழகும், கணவனின் ஏகப்பட்ட பிரியமும் ஒன்று சேர்வதால் இவர்களுக்கு நிறைய குழந்தைகள் பிறக்கும்.

செவ்வாய்க்கிழமை ருதுவாகும் பெணகள் தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக விளங்குவர்கள். இவர்களுக்கு முன் கோபம் அதிகம். இவர்கள் அவ்வளவு சுலபத்தில் யாரையும் நம்ப மாட்டார்கள். அதிகமான உஷ்ண உடம்பை கொண்டவர்கள். அதிக கோபம் கொண்டவர்களாக இருந் தாலும் அன்புள்ளம் கொண்டவர்கள். வீட்டில் மீனாட்சி ஆட்சிதான் நடக்கும்.

புதன்கிழமையில் ருதுவாகும் பெண்கள் அறிவாளிகளாக திகழ்வார்கள் கலை, ஓவிய துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர் களாக இருப்பார்கள்! அழகான உடல்வாகு உடையவர்கள். கண்கள் கவர்ச்சியாக இருக்கும். இவர்களுக்கு வரும் கணவர் மனதுக்கு பிடித்தமானவராக இருப்பார். மகிழ்ச்சியான வாழ்கை நடத்துவர்.

வியாழக்கிழமையில் ருதுவான பெண்கள் நற்குணம் கொண்டவர் களாக இருப்பர். அழுகும், தெய்வ பக்தியும் மிகுந்து இருக்கும். கணவர் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டவராக இருப்பார்கள். தன்னுடைய கணவர் மனம் புண் படக்கூடாது என நினைப்பார்கள். இவர்கள் அதிக பிள்ளைகள் பெறுவார்கள்.

வெள்ளிக்கிழமையில் ருதுவான பெண்கள் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பார்கள். கல்வி ஆர்வம் உடையவர்கள். தெய்வ பக்தி, உயர்ந்த சிந்தனை உடையவர்கள். தனித்துவமாக வாழக்கூடியவர்கள், செல்வமும் இருக்கும். சுத்தமான ஆடைகளை அணிவார்கள். தாய் வீட்டை விட, கணவர் வீட்டில் மன மகிழ்ச்சியுடன், செழிப்புடன் வாழ்வார்

சனிக்கிழமையில் ருதுவான பெண்கள் முகக்களையுடன் இருப்பார்கள். இவர்கள் அதிக உடல் உழைப்பு இல்லாமல் எல்லாவற்றையும் சாதிக்க கூடியவர்கள்.பொறுமையும், சகிப்புத்தன்மையும் கொண்டவர்கள். நேர்மையாக இருப்பார்கள். உண்மையும், சொன்ன சொல் மாறாதவர்கள். யாருக்காகவும், எதற்காகவும் நேர்மையை விட்டுக்கொடுக்காதவர்கள்.

கருத்து தெரிவிக்க