பொன்மொழிகள்

சுயமதிப்பு என்றால் என்ன?

‘எனக்கு ஒன்றும் தெரியாது’ ‘நான் அழகில்லை’, ‘எனக்கு விவரம் போதாது’ என்றெல்லாம் சிலர் அவர்களைப் பற்றி நினைப்பார்கள். இதெல்லாம் சிலருக்கு அவர்களைப் பற்றி அவர்களுக்கு இருக்கும் சுமாரான மதிப்பீடுகள். தன்னைப் பற்றி தாழ்வாக நினைப்பது; இப்படி இருப்பதற்கு பெயர், “தற்பெருமை இல்லாமல் இருப்பது” அல்ல. இதற்க்கு பெயர் சுய மதிப்பு இல்லாமல் இருப்பது. ஆகவே ஒவ்வொருவரும் தன்னைப்பற்றி மதிப்பாகதான் நினைத்துக் கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மை கூடாது. தன்னை குறைத்து மதிப்பிடக்கூடாது. இதனையே தமிழில் சுயமதிப்பு என்றும் ஆங்கிலத்தில் Self-Esteem என்றும் கூறுவார்கள். இந்த  சுயமதிப்பின் அதிக பட்சம் தான் தற்பெருமை, அது தான் தவறு அதைத் தான் தவிர்க்க வேண்டும்.

 

கருத்து தெரிவிக்க