அழகு / ஆரோக்கியம்

நகங்களை பராமரிக்க சில வழிமுறைகள்

நகங்களை பராமரிப்பது அழகு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, ஆரோக்கியம் தொடர்பானதும் கூட. அதற்கான வழிமுறைகள் பார்க்கலாம்.

 

  • நகங்களை வெட்டி சின்னதாக வைத்திருங்கள். நீண்ட நகங்களைக் காட்டிலும் குட்டையான நகங்களைக் கொண்டிருப்பது எப்போதும் சிறந்தது. அவற்றை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. குறைந்த பராமரிப்பே தேவைப்படும் மேலும் சேதமாவதற்கும் வாய்ப்புக் குறைவு.
  • குட்டையான நகங்களுக்கு அடியில் அழுக்கு சேரும் வாய்ப்புக் குறைவு. தீங்கு விளைவிக்கும் கிருமிகள் நகத்துக்குள் சேராமல் தவிர்க்கலாம்.
  • நகங்களை வறட்சியாக விடாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. இது நகங்களை வலுவாக வைத்திருப்பதற்கான பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. எனவே, நீர் அதிகமாக அருந்துங்கள். உடலில் நீர்ச்சத்து குறைவது தடுக்கப்படுவது நகத்துக்கும் நல்லது. க்யூட்டிகிள் க்ரீம்கள் நகத்துக்கு ஈரப்பதம் தந்து, உடைவதைத் தடுக்கும்.
  • செயற்கை நகங்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அந்தப் பசை நகங்களை வலுவிழக்கச் செய்வது மட்டுமல்லாமல், அதன் கீழ் அழுக்குகள் சேர்ந்து கிருமி பெருகும் இடமாகவும் மாறலாம்.
  • சரிவிகித உணவை சாப்பிடுங்கள். உணவில் வைட்டமின், நார்ச்சத்து, புரதம், கால்சியம் போன்றவை இடம் பெற வேண்டும்.
  • சானிடைசரை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், இது நகத்தை பலவீனமாக்கும்.
  • அதிக நேரம் நீருக்குள் கையை வைத்திருக்கும் சூழ்நிலையில் கையுறை அணிந்துகொள்வது பரிந்துரைக்கத்தக்கது.
  • ஒரு முறை அணிந்த நெயில்பாலிஷை அப்படியே நீண்ட நாள்களுக்கு விடாமல், நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கி நகங்களை காற்றுபட விடுவது நல்லது. குறிப்பாக, அடர் நிற நெயில்பாலிஷ்களை விரைவில் நீக்கிவிடுவது நல்லது. அதே நேரம், அடிக்கடி நெயில் பாலிஷ் ரிமூவரை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

கருத்து தெரிவிக்க