இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கொழும்பு மற்றும் போலந்தின் வார்சாவை இணைக்கும் வகையில் பட்டைய விமான செயற்பாடுகள் ஆரம்பம்

 

கொழும்பு மற்றும் போலந்தின் தலை நகரமான வார்சாவை இணைக்கும் வகையில் லொட் போலிஷ் ஏயர்லைன்ஸ் நேற்று (05) தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்று ஏர்போர்ட் அண்ட் ஏவியேஷன் சர்வீசஸ் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) தெரிவித்துள்ளது.

 

லொட் போலிஷ் ஏயர்லைன்ஸின் கீழ் போயிங்-789 ட்ரீம்லைனர் விமானம் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 282 சுற்றுலாப் பயணிகளுடன் மதியம் 12.30 மணிக்கு தரையிறங்கியதாக தெரிவித்தனர்.

 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மார்ச் 29, 2024 வரை இந்த பட்டைய விமான செயற்பாடுகள் தொடரும் என்று AASL அறிவித்தது. விமானம் BIA க்கு வந்தடைந்ததும் ஜெட்விங் டிராவல்ஸ் ஏற்பாடு செய்த பாரம்பரிய கண்டியன் நடன நிகழ்ச்சி மூலம் பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.மேலும், இலங்கைக்கு வருகை தந்த ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை சுற்றுலாத்துறை பரிசுகளை ஏற்பாடு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க