உலகம்வெளிநாட்டு செய்திகள்

தென்கொரியா மீது வடகொரியா திடீர் கடல் வழி தாக்குதல்!

வட கொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு சொந்தமான தீவில் திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி வடகொரியா தாக்குதல் நடத்தி உள்ளது என்று சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. இந்த நடவடிக்கைகள் அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக இருப்பதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் தென்கொரியா கூறி உள்ளது. 2010 ஆம் ஆண்டில் இருந்தே இந்த தீவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. 2010ல் இந்த தீவுகளின் மீது வடகொரியா சரமாரியாக குண்டுகள் வீசியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதை சுற்றி உள்ள கடல் பகுதிகளில் மிகத் தீவிரமான இராணுவ பாதுகாப்பு போடப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக போர் எதுவும் நடக்காமல் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.

இந்த நிலையில்தான் அங்கே திடீரென வடகொரியா பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளது. தென் கொரியா மற்றும் அதன் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிரான போருக்கு தயாராக இருப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்தே தற்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
தென்கொரியாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில வருடம் முன்புதான் இரண்டு நாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், இரண்டு நாட்டு அதிபர்களும் ஒன்றாக எல்லைகளை கடந்து நட்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தற்போது கடந்த ஒரு மாதமாக வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே மிக தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. இப்போது இந்த பிரச்சனை போராக மாற வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் வடகொரியாவின் சக்தி வாய்ந்த பெண்ணும், கிம் ஜோங் உன்னிங் தங்கையுமான கிம் யோ ஜோங் தென் கொரியாவை கடுமையாக எச்சரித்து இருக்கிறார். அதில் , தென் கொரியாவிற்கு எதிராக வடகொரியா கடுமையான நடவடிக்கை எடுக்க போகிறது. நாங்கள் ராணுவ ரீதியான நடவடிக்கையை எடுக்க போகிறோம். தென் கொரியாவுடன் மொத்தமாக உறவை துண்டிக்கும் நேரம் வந்துவிட்டது.
போர் பின்னணி:
தென் கொரியாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் 1950ல் நடந்த கொரிய போரில் இருந்தே மோதல்கள் நிலவி வருகின்றன. இரண்டாம் உலகப்போரின் முடிவில் 1945ல் கொரியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்று இரண்டாக பிரிந்தது.
அடுத்த 5 வருடங்களில் இந்த பகுதிகள் ஒன்றாக இணைய வேண்டும். ஆனால் பனிப்போர் காரணமாக அமெரிக்கா – ரஷ்யா மோதிக்கொண்டு, கடைசியில் அது கொரிய போருக்கும் வித்திட்டது. போரின் முடிவில் ரஷ்யாவின் ஆதரவில் வடகொரியா என்ற நாடும், அமெரிக்காவின் ஆதரவில் தென் கொரியா என்ற நாடும் உருவானது.
அப்போதில் இருந்து வடகொரியா கம்யூனிச நாடாக இருந்து வருகிறது. அங்கு கிம் ஜோங் உன் குடும்பம் ஆட்சி செய்து வருகிறது. தென் கொரியாவில் அமெரிக்கா நடத்திய தேர்தல் மூலம் வலதுசாரி ஆட்சி முறை அமலுக்கு வந்தது. இதில் வடகொரியாவிற்கு சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிச நாடுகள் போரின் சமயத்தில் உதவி செய்தன. அதில் இருந்து வடகொரியா அமெரிக்காவிற்கு எதிராகவும், ரஷ்யா, சீனாவிற்கு நெருக்கமாகவும் இருந்து வருகிறது. இதே நிலைதான் தற்போதும் நீடித்து வருகிறது.
வரலாற்று ரீதியாகவே எப்போதும் வடகொரியா அமெரிக்கா உறவு சரியாக இருந்தது கிடையாது. தென் கொரியா அமெரிக்க ஆதரவு நாடாகவும், வடகொரியா சோவியத் உள்ளிட்ட கம்யூனிச நாடுகளின் ஆதரவாகவும் இருந்து வந்துள்ளது. கிம் ஜோங் உன் வடகொரியா அதிபரான பின் அமெரிக்கா வடகொரியா உறவு மிக மோசமான நிலையை எட்டியது. முக்கியமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தி அமெரிக்காவிற்கு சவால் விட்டது.
அணு ஆயுத ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை சோதனை செய்து அமெரிக்காவிற்கு வடகொரியா நேரடியாக சவால் விட்டது. அமெரிக்காவும் வடகொரியாவை பல இடங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. அமெரிக்காவில் டிரம்ப் அதிபரான பின் இரண்டு நாட்டு உறவு மிக மோசமான நிலையை அடைந்தது.
இருப்பினும் 2020ம் வருட தொடக்கத்திலேயே அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியும்  வடகொரியாவின் ஜனாதிபதியும்  ஒருவரை ஒருவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் வெடிக்குமோ என்ற அச்சமும் பதற்றமும் நிலவியது. கடந்த சில வாரங்களாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை அதிகப்படுத்தி வந்தது. திடீரென அதிக தொலைவில் செல்லும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து வந்தது. இந்த நிலையில்தான் தற்போது இரண்டு தரப்பிற்கும் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

கருத்து தெரிவிக்க