மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனங்களைப் பதிவுசெய்தல் மற்றும் இடமாற்றம் செய்வது தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கு பிப்ரவரி முதல் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆகவே, வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) இன்றி வாகனங்களை பதிவு செய்யவோ அல்லது உரிமை மாற்றம் செய்யவோ முடியாது என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை பெறுவதென்றால் கூடிய விரைவில் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெற்றுக்கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்ததோடு, இலக்கம் இன்றி திணைக்களத்திற்கு வந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டார்.
கருத்து தெரிவிக்க