மின்கட்டணத்தை கூடிய விரைவில் 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களாக பெய்த தொடர் மழையின் பயனை மக்களுக்கு வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை செயற்பட்டு வருவதாகவும்,
அதற்கமைவாக நீரினால் மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் இலாபம் நிச்சயமாக பொதுமக்களுக்கே கிடைக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மின்னுற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்காகவே கடந்த ஆண்டு இரண்டு முறை மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டன.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மின்னுற்பத்தி தொடர்பான செலவுகள் குறித்த விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைப்போம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க