உலகம்

நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் கடந்த 40 நாட்களில் 132 பேர் உயிரிழப்பு !

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதோடு,  நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. இன்னும் 60 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என நேபாள நாட்டின் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நிலச்சரிவு, வெள்ளம், பனிச்சரிவு, கனமழை போன்றவற்றால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் 1952 பேர் உயிரிழந்துள்ளனர். பெருமளவில் பொருட்களும் சேதமடைந்தன. பெரிய அளவிலான பனிச்சரிவுகளில் சிக்குண்டு 40 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டும் கடந்த மாதம் மழைக்காலம் தொடங்கியது. இதில் நாட்டில் உள்ள 77 மாவட்டங்களில் 70 மாவட்டங்கள்  வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று வரை 132 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 53 பேர் காணாமல் போய் உள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர்.  ஆயிரக் கணக்கான குடும்பங்கள் மழைக்காலம் ஆரம்பித்த பின்னர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  அதனால் பொருட் சேதங்களும் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. நேபாள அரசாங்கம் அதற்கான கணக்கெடுப்புகளை இன்னும் ஆரம்பிக்கவில்லை .

கடந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கி 40 நாட்களில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு 40 நாட்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க