இலங்கை

அரசியல் குழப்ப நிலையைத் தடுப்பதற்கு தேர்தலே ஒரே வழி: மிலிந்த மொறகொட

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பநிலையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி தேர்தலிற்குச் செல்வதே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு முன்னெப்போதும் இல்லாதவாறு கடுமையான நெருக்கடியினைச் சந்தித்திருக்கின்றது. அரசியல் ரீதியாகப் பிளவடைந்துள்ள நாட்டினை ஒன்றுபடுத்தவேண்டியது அரசியல் தலைவர்களினது கடமையாகும்.

இந்த நிலைமைகளைக் கட்டுப்படுத்தவேண்டியது பொறுப்புமிக்கதோர் செயற்பாடாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யும் நடுநிலையான பிரதமர் மற்றும் காபந்து அரசாங்கத்துடன் தேர்தலுக்கு செல்ல வேண்டும்.

நடுநிலையான பிரதமர் ஒருவரை நியமிக்க முடியாதென்றால் அதற்கு பதிலாக சமூகத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரை குறித்த பதவிக்கு நியமிக்க வேண்டும். தேசிய பட்டியல் மூலம் அத்தகைய ஒருவரை நாடாளுமன்றத்திற்கு நியமிக்க முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க