இலங்கையில் பெரும்பான்மையினரின் கருத்தையும் அவர்களின் மதத்தையும் அடிப்படையாக கொண்டே அரசியல் நகர்வுகள் நடைபெறுகின்றது. இதனால் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனைகள் இவர்களிடம் ஒரே விதமாகவே காணப்படுகின்றதென வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்களிடம் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனைகளில் வேறுபாடில்லை.
இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அல்லது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய அனைவரும் சிங்களத்தையும் பௌத்தத்தையும் முதன்மையாக கொண்டே ஆட்சி நடத்துகின்றனர்.
இதனை நீண்டகாலமாக அரசியலில் இருக்கின்றவர்களால் நன்கு உணர்ந்துகொள்ள முடியும்.மேலும் தமிழ் மக்களின் பிரச்சினையில் ஒரு சாரார் நேரடியாகவும் சிலர் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதனால் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் சர்வதேசத்தின் ஊடாக பெரும்பான்மை அரசியலவாதிகளுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஆகையால் தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு சிந்தித்து செயலாற்றுவது சிறந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க