2014இல் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மலேசியாவில் மேலும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
மலாக்கா, பினாங் மற்றும் செலங்கர் ஆகிய இடங்களில் இருந்தே இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் மலேசியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உதவினர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நேற்று முன்தினமும் 7 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தநிலையில் இந்த கைது சம்பவங்கள் தொடர்பில் மலேசிய காவல்துறை நாளை ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மலேசியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகரகம் மீது தாக்குலுக்கு திட்டமிட்டவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை மலேசியாவில் இந்த வருடத்தில் 284 ஜம்மாத் இஸ்லாமியா உறுப்பினர்கள், 512 ஐஎஸ் தீவிரவாதிகள், 25 விடுதலைப்புலிகளை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க