உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

சிவாஜிலிங்கத்தை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் எம் கே சிவாஜிலிங்கத்தை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளதாக டெலொ என்ற தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவி;த்துள்ளார்.

கட்சியின் அனுமதியைப்பெறாமல் ஜனாதிபதி வேட்பு மனுவை தாக்கல் செய்த தினத்தில் இருந்து அவரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது

எனினும் எதிர்வரும் 12ஆம் திகதியே கட்சியின் செயற்குழு கூடி அவரின் உறுப்புரிமையை நீக்கும் என்றும் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் கட்சியின் தவிசாளர் நிலையில் இருந்து தாம் ஏற்கனவே விலகிவிட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எனினும் கட்சியி;ன் சாதாரண உறுப்புரிமையில் இருந்து தம்மை நீக்கினால் சட்ட நடவடிக்கையை எடுக்கப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க