கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீகேபி தஸநாயக்கவுக்கு கொமடோர் பதவியுயர்வு வழங்கப்பட்டமை தொடர்பில் காணாமல் போனோர்; தொடர்பான அலுவலகம் தமது கவலையை வெளியிட்டுள்ளது.
இந்த கவலையை ஜனாதிபதியிடம் தெரிவிக்கவுள்ளதாக அந்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து 11 இளைஞர்கள் கடத்திச்செல்லப்பட்டமை தொடான சம்பவத்தில் தஸநாயக்கவுக்கும் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டமையானது பிழையான செய்தி ஒன்றை கூறியிருக்கிறது என்று சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தஸநாயக்கவுக்கு பதவியுயர்வு வழங்கப்படுவதற்கு முன்னர் தமது சட்ட அலுவலர்கள், பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டபோது அந்த பதவியுயர்வை வழங்குவதற்கான அனுமதியை அந்த அமைச்சு வழங்கியதாக கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க