கடந்த சில நாட்களுக்கு முன்பு லைக்கா நிறுவனம் தங்களுடன் பணியாற்றிய ஐங்கரன் நிறுவனத்தின் தலைவர் கருணாமூர்த்தி மீது 180 கோடி ரூபாய் புகார் கூறியதற்கு பதிலளித்து ஐங்கரன் கருணாமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது, லைக்கா நிறுவனம் இந்தியாவில் இலாபகரமாக தொழில் செய்ய 32 வருட அனுபவம் வாய்ந்த தான் தேவைப்பட்டதாகவும் லைகாவுக்கு தோள் கொடுத்து அதனை ஒரு திரைப்பட நிறுவனமாக வளர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஆயிரம் ரூபாய்க்கேனும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரமின்றி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே எந்த பணப்பிரச்சினைக்கும் தான் பொறுப்பல்ல எனவும் எல்லா படங்களும் லைக்கா தலைவர் சுபாஷ்கரன் மேற்பார்வையிலேயே நடந்தது எனவும் லாபத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு நஷ்டத்தை என் தலையில் திணிக்கப்பார்க்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி லைக்கா நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டின் நோக்கம் தன்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே என்றும் அதனை தான் சட்டப்படி எதிர்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க