உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

காணாமல் போனோர் என்று கூறப்படுவோர் பிரித்தானியாவிலும் இருக்கலாம்- நேயஸ்பி பிரபு

சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவத்தளபதியாக நியமித்தமையை ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய நாடுகளும் விமர்சிக்கின்றமையை பிரித்தானியாவின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸேபி குற்றம் கூறியுள்ளார்.

இதனை அவர்கள் கருத்திற்கொண்டிருக்க அவசியமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும் இலங்கை- பிரித்தானிய அனைத்துக்கட்சி குழுவின் தலைவருமான மைக்கல் மொரிஸ் நேசேபி, இது தொடர்பில் மேலும் கூறும்போது சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை இலங்கையின் நல்லிணக்கத்தை பாதிக்காது என்பதை தாம் பிரி;த்தானிய வெளியுறவு அமைச்சுக்கு விளக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலக விடயத்தை முன்னோக்கி நகர்த்தச் செல்லவேண்டும்.
சவேந்திர சில்வாவின் நியமனத்தினால் அது நகர்வு நின்றுவிடாது.

எனினும் அந்த விடயத்தை முன்னகர்த்திச் செல்ல சில காலம் செல்லும் என்றும் நேயஸ்பி சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகத்துக்கு உரிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு காணாமல் போனதாக கூறப்படுவோர் உண்மையில் இறந்துவிட்டார்களா? அல்லது உலகில் எங்காவது வாழ்கிறார்களா? என்பதை கண்டறியமுடியும்.

காணாமல் போனோர் என்று கூறப்படுவோர் பிரித்தானியாவிலோ, கனடாவிலோ, அமரிக்காவிலோ அல்லது அவுஸ்திரேலியாவிலோ வாழலாம்.

எனவே காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகள் சவால் மிக்கது. எனவே அதற்கு உரிய மூலவளங்கள் அவசியமாகும் என்று நேயஸ்பி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இன்னும் இலங்கையில் உள்ளனர்.

பலர் பிரித்தானியாவில் உள்ளனர்.

தேர்தல்களின்போது தமிழர்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை பயன்படுத்திக்;கொள்கின்றன.

இந்தநிலையில் புலம்பெயர்ந்தவர்கள் இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்துவதைக் காட்டிலும் இலங்கைக்கு உதவிசெய்யவேண்டும்.

அவர்களின் குடும்பங்கள் இங்கு இருப்பதால் தாய்நாட்டுக்கு அவர்கள் உதவியளிக்கவேண்டும் என்றும் நேயஸ்பி குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க