உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அமைதிப்படைகளில் இருந்து 25வீதப் படையினரே திருப்பியனுப்பப்படுவர்

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் பணியாற்றும் 25 வீதமான இலங்கை படையினர் மாத்திரம் அவர்கள் சேவைக்காலம் முடிவடைந்தநிலையில் நாடு திரும்பவுள்ளனர்.

வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு திணைக்களத்தின் செயலாளர் நாயகம் ஜூன் பியஸ் இந்த தகவலை நியூயோர்க்கில் வைத்து நேற்று வெளியுறவு செயலாளர் ரவிநாத ஆரியசிங்கவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை தவிர வேறு இலங்கைப்படையினர் அமைதிகாப்பு படைகளில் இருந்து திருப்பியனுப்பப்படமாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவ தளபதியாக நியமித்தமையை அடுத்து ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகளில் பணியாற்றும் இலங்கைப்படையினருக்கு தடை விதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 25ஆம் திகதி அறிவித்திருந்தது.

கருத்து தெரிவிக்க