வெளிநாட்டு செய்திகள்

சீனாவில் உள்ள முஸ்லிம்கள் பற்றி நிலையை பாகிஸ்தான் பேசுவதில்லையே- அமெரிக்கா கேள்வி

காஷ்மீரில் இருக்கும் முஸ்லிம்களின் மனித உரிமை மீறல் பற்றி பேசும் பாகிஸ்தான், சீனாவில் உள்ள முஸ்லிம்களின் பயங்கரமான நிலைமை பற்றி பேசுவதில்லையே ஏன்? என்று அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொறுப்பு துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ் பேசியதாவது:-

சீனா அனைத்துவகையிலும் பாகிஸ்தானுக்கு நட்பு நாடாக உள்ளது. சீனா தனது பொருளாதார இன்னல்களை வெற்றிபெறுவதற்காக பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கி பணத்தால் கட்டிப்போட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசார் மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதல் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீது போன்றவர்கள் மீது உலக நாடுகளின் முயற்சிக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு சீனா உதவியாக இருக்கிறது.

சீனா 10 லட்சம் ‘உய்குர்ஸ்’ மற்றும் துருக்கி மொழி பேசும் முஸ்லிம்களை ஜின்ஜியாங் மாகாணத்தில் காவலில் வைத்துள்ளது. அங்குள்ள முஸ்லிம்களின் நிலைமையும் ஒரே நிலையில் இருப்பதாக பார்க்கிறேன். எனவே பாகிஸ்தான் சீனாவில் முஸ்லிம்களின் மனித உரிமை மீறல்கள் பற்றி காஷ்மீரைவிட அதிகமாக பேச வேண்டும்.

இந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் சீனா முழுவதும் பயங்கரமான நிலைமைக்கு உள்ளாகியிருக்கும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கருத்து தெரிவிக்க