உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் நான்காவது நாளாகவும் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

நீதியினை நிலைநாட்ட தவறியவர்களையும் சடடத்தை மதிக்காதவர்களையும் தண்டிக்க கோரிய போராடடம் இன்றும் தொடர்கிறது

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து குடிகொண்டிருந்த பௌத்த மதகுரு உயிரிழந்த நிலையில் அவரது உடலம் நீராவியடி பிள்ளையார் ஆலய கேணிப்பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டமை நீதிமன்றத்தை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

அதேவேளையில் இடம்பெற்ற சம்பவங்களின் போது சட்டத்தரணி உள்ளிட்டவர்கள் தாக்கப்பட காரணமாக இருந்தவர்களை கைது செய்யவும் சட்டத்தை மதிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் கோரி சட்டத்தரணிகள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய தினம் நான்காவது  நாளாகவும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க