உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

தற்கொலையாளிகள் இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளனர்.- இந்திய ஊடகம்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் இருவர், இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையின் இராணுவத்தளபதி கூறியதைப்போன்று அவர்கள் பயிற்சிகளுக்காக அங்கு வந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை

.
இந்திய விசாரணையாளர்களை மேற்கோள் காட்டி, இந்திய செய்தித்தாள் ஒன்று இதனைக்குறிப்பிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் இந்த இருவரும் வர்த்தக வீசா அடிப்படையில் இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளனர்.
சங்ரிலா விருந்தகத்தில் தாக்குதலை நடத்திய, இன்ஹாம் அஹமட், சினமன்காடன் விருந்தகத்தில் தாக்குதலை நடத்திய மொஹமட் இப்ராஹிம் ஆகியோரே இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள், பெங்களூரு, கொச்சி, சென்னை, மும்பாய், மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை இலங்கையின் தாக்குதலுக்கு மூலக்காரணமாக இருந்தவர் என்று கூறப்படும் ஹாஷிம் ஸஹ்ரான் தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம். இந்த வருடம் ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு பல புலனாய்வு தகவல்களை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஸஹ்ரான், 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்ற அங்கு சிலரை சந்தித்துள்ளார்.
இதன்போது காஸ்மீரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தொடர்பை ஏற்படுத்தித்தருமாறு கோரியுள்ளார்.
எனினும் இந்திய காஸ்மீருக்கு செல்லவில்லை.

கருத்து தெரிவிக்க