உள்நாட்டு செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் முதல் இலங்கையர் – பிரதமர்

இலங்கை சர்வதேச பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமையால், இன்னும் இங்கு பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

டாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்று இதன்போது அவர் குறிப்பிட்டார்.

இலங்கை, கடந்த இரண்டு வாரக்காலப்பகுதியில் சர்வதேசத்தின் புலனாய்வு சேவையை பெற்றுக்கொண்டது.

எனினும் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளப்போவதில்லை.

மொஹமட் முஸின் இசாக் அஹ்மட், மொஹ மட் உ மொஹமட் அமீன், மொஹமட் சுஹைர் மொஹமட் ஆருஸ் ஆகியோர் சிரியாவுக்கு சென்று அங்கு ஐஎஸ்ஐஎஸ_டன் இணைந்துள்ளனர்.
சிரியாவுக்கு சென்று, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தி;ல் இணைந்த முதல் இலங்கையராக மொஹமட் எம் சப்ராஸ் பதிவுப்பெற்றுள்ளார்.

2016இல் அவரும் பெற்றோரும் நாடுதிரும்பினர். இந்தநிலையில் அவர்கள் தொடர்பில் தற்போது, விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

 

 

 

 

 

கருத்து தெரிவிக்க