முல்லைத்தீவு நீராவியடி சம்பவமானது சிங்கள இன வாதிகளின் ஒரு இன அடக்கு முறையின் வடிவமாகவே நாங்கள் கருதுகின்றோம்.
யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் தமிழர் தாயகத்தின் இதய பூயின் ஆண்மாவில் கால் பதித்த சிங்கள இனவாதம் மெல்ல மெல்ல தமிழின அடக்கு முறையை ஆரம்பித்து நிற்க்கிண்றது.
என ஜனநாயகப் போராளிகள் கட்சி பொது செயலாளர் இ.கதிர் வியாழக்கிழமை(26) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….
மரணித்த மதகுரு ஒருவரின் உடலை அடக்கம் உரிமையை நாம் நன்கு புரிந்து கொள்வோம் பௌத்த மத்தை நாம் மதிக்கின்றோம்.
சிங்களம் மட்டு பௌத்தத்திற்கு மதிப்பளிக்காது இன ஆதிக்கத்தை மதரீதியாக கட்டவிழ்த்து நிற்க்கின்றது.
சட்டத்தை மதிக்காது தாங்கள் மேலாதிக்க சக்த்தியாக காட்டி எமது மக்களை அடிமை கொள்ள நினைப்பது ஒரு ஜனநாயகப் பண்புகளை மீறிய செயலாக நாம் பார்க்கின்றோம்.
காலம் கடந்தும் கற்றுக் கொண்ட பாடங்களும் சிங்கள இனவாதத்திற் இன்னும் புரியவில்லை இது ஒரு இன முறண்பாட்டை தோற்றுவிக்கும் செயலாக நாம் பார்க்கின்றோம்.
நாட்டின் ஓற்றுமையை சீர் குலைக்கும் செயல் சிங்களம் தமிழ் என வேறு பட்டு வாழும் நிலையை மக்கள் மனதில் உருவாக்கும் செயல்.
ஒரு நாட்டின் சட்டத்தை மதிக்காது மதம் சார்ந்தவர்கள் சட்டத்தை கையில் எடுக்கின்ற போது மதக்கலவரம் உருவாகி இன முரன்பாட்டை உருவாக்கும் என்பதில் நாம் கடந்து வந்த வரலாற்றில் கற்றுக் கொண்டுள்ளோம்.
எனவே இவ் விடயம் தொடர்பாக தென்னிலங்கையில் இருந்து கொண்டு கருத்துக்களைக்கூறும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.
பௌத்த மத உருக்களின் இனவாத செயல்களை ஆதரித்து அவர்களை ஊக்கப்படுத்தும் செயல்களை நிறுத்தி விட்டு உண்மைய சட்டத்தை பயன் படுத்தி பக்கசார்பற்ற முறையில் இந்த விடயத்தை முடிவிற்கு கொண்டுவர முன்வர வேண்டும் என்பதனை நாம் விரும்புகின்றோம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க