முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் நீதிமன்ற கட்டளையை மீறி புத்த பிக்குவின் சடலத்தை எரியூட்டியமை, சட்டத்தரணி சுகாஸ் மற்றும் மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடி தொடர்பில் வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிள்ளையார் ஆலய நிர்வாகிகளும் தமிழர் மரபுரிமை பேரவையினரும் இணைந்து இன்று முற்பகல் குறித்த முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சம்பவங்களுக்கு எதிராக நேற்று முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க