உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யுத்தம் முடிந்து 10 வருடங்களாகியும் தீர்வு கிடைக்காமைக்கு காரணம் என்ன?

யுத்தம் முடிந்து 10 வருடங்கள் ஆகியும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செய்லாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த கால நல்லாட்சி என்று கூறப்படுகின்ற ஆட்சியில் இரண்டு தேசியக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்து அவர்களின் உடன்பாட்டுடன் ஜனநாயக மரபுகளை மீறி இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

ஆனால் நடந்தது என்ன? இதுவரை தமிழ் மக்களுக்கு ஏதாவது கிடைத்ததா? பதிலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்ததை
விட அதிகளவு சலுகைகள் கிடைத்தன.

ஒரு அரசாங்கத்துடன் பேரம் பேசும் போது பேரம் பேசுபவர்கள் ஜனநாயகப் பண்புகளை மதிக்கக்கூடியவர்களாக சலுகைகளுக்கு சோரம் போகாதவர்களாக இருந்திருக்க வேண்டும். அதற்கான தகுதி ஓரளவுக்காவது இருந்திருக்க வேண்டும்.

அதனால்தான் என்னவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் அனைத்தும் 2004 தொடக்கம் இன்று வரை மாறிமாறி வந்த அரசுகளால்  புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன.

2004ம் ஆண்டு புலிகளுக்கு தவறான தகவல்களை வழங்கி ஒரு சிலரின் பதவிமோகத்திற்காக உருவாக்கப்பட்டதே தற்போது நடைமுறையிலுள்ளபுதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும்.

அப்போது நடந்த தேர்தலில் விடுதலைபுலிகளின் முழு ஒத்துழைப்புடன் ஜனநாயக தேர்தல் விதிமுறைகளை மீறி 22 பேர் வெற்றி பெற்றார்கள்.

எனவே அரசின் ஜனநாயக விரோதப் போக்குகளை இவர்களால் தட்டிக்கேட்க முடியாது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் உருவாக்கிய காரணத்தால் அவர்களின் பெயரைச் சொல்லி இன்று வரை மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி ஏமாற்றி வருகின்றார்கள்.

ஜனநாயக விதிமுறைகளை மீறியே எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டது.

அதனால் அரசாங்கத்தைத் தட்டிக் கேட்கும் உரிமையும் தகுதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடையாது.

அரசுக்குப் பட்ட நன்றிக்கடனாக ஒவ்வொரு வருட வரவு செலவுத் திட்டத்திற்கும்இ ஆதரவு கொடுத்து வருகின்றார்கள்.

எந்த ஒரு விடயத்திலும் பேரம்பேசும் சக்தி அவர்களுக்குக் கிடையாது என்று 2004 தொடக்கம் 2019 வரை அவர்களின் ஜனநாயக விரோதப் போக்கை கண்காணித்து வந்தஅரசாங்கங்கள் கூட்டமைப்பின் வாயை அடைத்துவிடும்.

இவர்களும் ஏன் வம்பு- கிடைப்பதை சுருட்டிக் கொண்டுபோகலாம் என்று இருந்துவிடுவார்கள்.

ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி அவ்வாறு உருவானதல்ல. தந்தை செல்வா சட்டமாமேதை ஜீ.ஜீ பொன்னம்பலம் போன்ற தன்னலம் கருதாத தலைவர்களால் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டது.

அமரர். சௌ. தொண்டமான் அவர்களையும் இணைத்து மலையகம் வாழ் தமிழ் மக்களையும் ஓரணியில் திரட்ட உருவாக்கப்பட்டது.

இன்று வரை ஜனநாயகத்துக்காகவே போராடி பல தலைவர்களை துப்பாக்கிக் குண்டுகளுக்கும் தற்கொலை குண்டுதாரிகளுக்கும் இரையாகக் கொடுத்து வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களின் ஒரேயொரு ஜனநாயகக் கட்சியாக தலை நிமிர்ந்து நிற்கின்றது!

1983ஆம் ஆண்டுஅன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனஅவர்கள் பாராளுமன்ற ஜனநாயகவிதிமுறைகளைமீறிமேலும் ஆறு ஆண்டுகாலம் பாராளுமன்றத்தை நீடித்தபோது இது மக்கள் தந்தஆணையைஇமீறும் செயல் எனக் கூறிஅந்த ஜனநாயகவிரோதபோக்கைக் கண்டித்து 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியைத் துறந்துசர்வதேசத்திற்குபாராளுமன்ற ஜனநாயகத்தைக் கற்பித்தஒரேகட்சி.

அதனால்தான் பலசோதனைகளையும் தாண்டி இன்றுவரைதனித்தன்மையுடன் நிற்கின்றது!

எனவே வடக்கு கிழக்கில் இருக்கின்ற ஒரேயொரு ஜனநாயகக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து ஒற்றுமையாக செயற்பட்டு எந்த அரசு வந்தாலும் தட்டிக்கேட்கும் தகுதியும் தகைமையும் உள்ள ஒரே அமைப்பாக இணைந்து செயற்பட அனைவரையும் அழைக்கின்றோம்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் கடந்த 15 வருடங்களாக இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தர போராடிக் கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கரங்களைப் பலப்படுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

அடுத்தடுத்து தேர்தல்கள் வர இருப்பதால்இ கட்சியை புனரமைத்துஇமேலும் புதிய நிர்வாகிகள் தெரிவு சம்மந்தமாக வடக்கு கிழக்கு மாவட்டங்களில் எமது செயற்குழு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

எனவே எமது கட்சியுடன் இணைந்து செயற்பட விரும்புபவர்கள் எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளலாம் என தெரிவிததுள்ளார்.

கருத்து தெரிவிக்க