உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியும் பிரதமரும் தற்காலிகமாக வேறுபாட்டை தவிர்க்கவேண்டும்- ஜேவிபி

நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத பிரச்சனைக்கு தீர்வை காணும் வகையில் தற்காலிகமாவது, ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கிடையிலான அரசியல் வேறுபாட்டை தவிர்க்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இந்தக்கோரிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்.

பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வாரங்களாகியும், அரசாங்கத்தினால், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியவில்லை என்று அவர் குற்றம் சுமத்தினார்.

இந்தநிலையில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்காமல், ஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் நிகழ்ச்சித்திட்டத்துக்கு முக்கியத்துவம் வழங்கியமையே, தாக்குதல்களை தடுக்கமுடியாமல் போனமைக்கான காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தமது அரசியல் நலனுக்காக முஸ்லிம் தலைவர்கள், இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவித்தமையானது, இன்று அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறிச்சென்றுள்ளது..

எனவே நிலைமையை சீர்செய்வதில் முஸ்லிம் தலைவர்களுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் பாரிய பொறுப்பு இருப்பதாக அநுரகுமார சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க