உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னார் சிலாவத்துறை காணி பிரச்சினை – விசாரணை

மன்னார் சிலாபத்துறையில் அமைந்துள்ள பொதுமக்களின் பூர்விக காணிகளில் கடற்படையினர் முகாம் அமைத்துநிலை கொண்டுள்ளனர்.
குறித்த காணிகளை விடுவிக்குமாறு பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்கள் மேற்கொள்கின்ற போதும் இன்று வரை அவர்களது காணிகள் விடுவிக்கபடவில்லை.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கபட்ட மக்கள் சார்பில்  மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பான விசாரணை வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்றயதினம் இடம்பெற்றிருந்தது.
இதன்போதே ராணுவத்தினர் இவ்வாறு தெரிவித்ததுடன்  தேசியபாதுகாப்பை கருத்தில் கொண்டும், குறித்த கடற்பகுதியால் போதை போருள்கள் கடத்தபடுவதை தடுப்பதற்கும் குறித்த இராணுவ முகாம் அவசியமாக இருப்பதாக தெரிவிக்கபட்டிருந்ததுடன் பாதிக்கப்பட்டவர்கள் நஸ்ட ஈட்டை கோரமுடியும் எனவும் தெரிவித்திருந்தனர்.

குறித்த விசாரணையில்பாதிக்கப்பட்ட மக்கள், மற்றும் கடற்படையினர்,முசலி பிரதேச்செயலாளர் ஆகியோர்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

 
மன்னார் சிலாவத்துறை காணி பிரச்சினை மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் விசாரணை
மன்னார் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை பகுதியை சேர்ந்த மக்கள் யுத்தம் காரணமாக  இடம் பெயர்ந்து புத்தளம் அனுராதபுரம் குருனாகல் கற்பிட்டி போன்ற  பிரதேசங்களில் வசித்து வந்தனர்
இந்த நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த மக்கள் சிலாவத்துரை பகுதியில் மீள்குடியேற்றத்துக்கு என வருகை தந்த நிலையில் அவ் மக்களின் நிலங்களின் கடற்படையினர் பாரிய முகாம் அமைத்திருந்தனர்
தபாலகம் ஆரம்ப சுகாதார நிலையம் பாடசாலை நூலகம் கோவில் பள்ளிவாசல் உட்பட மக்களின் காணிகள்  28 ஏக்கர் கடற்படை ஆக்கிரமித்திருந்த நிலையில்
கடந்த வருடம் தங்கள் பூர்வீக நிலங்களை கடற்படையினர் விடுவித்து அருகில் உள்ள அரச காணிகளில் முகாம்களை அமைக்குமாறு கோரிக்கை விடுத்து சிலாவத்துறை கடற்கரை முகாமுக்கு முன்பாக சாத்வீக போராட்டம் ஒன்றை மக்கள் முன்னெடுத்திருந்தனர்
அதன் ஒரு பகுதியாக மாசி மாதம் 22 திகதி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்(MSEDO) உதவியுடன் மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில் தமது காணிகளை கடற்படை விடுவித்து தருவதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறு கோரி முறைப்பாடு ஒன்று கையளீக்கப்பட்ட நிலையில்
குறித்த முறைப்பாடு தொடர்பாக கவனம் செலுத்திய மனித உரிமை ஆனைக்குழு இன்று திங்கட்கிழமை குறித்த காணி விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட முசலி பிரதேச செயலாளார் சிலாவத்துறை கடற்படை பொறுப்பதிகாரி மற்றும் வடமேல் கடற்படை கட்டளை தளபதி முள்ளிக்குளம், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பக பிரதிநிதிகளை அழைத்து வவுனியா மனித உரிமை ஆணைக்குழு காரியாலயத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது அதன் அடிப்படையில்
இன்றைய விசாரணையின் போது குறித்த கானியானது தேசிய பாதுகாப்பிற்கு அவசியமானது என்பதனால் குறித்த காணியை சட்ட ரீதியாக கடற்படைக்கு உரித்தக்குவதற்கான செற்பாடுகள் இடம் பெறுவதாகவும் குறித்த கடற்பகுதியூடாக போதை பொருட்கள் பாரிய அளவு கடத்தப்படுவதாகவும் எனவே அவ் காணி தேசியபாதுகாப்புக்கு அவசியம் என கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் பாதிக்கப்பட மக்களுக்கு நஸ்ர ஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருவதாக பிரதேச செயலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது
இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பகவும் மெசிடோ நிறுவனம் சார்பாகவும் முன்னிலையான சட்டதரணி அர்ஜூன் குறித்த காணிகள் மக்கள் பூர்விகமாக வாழ்தவை என்பதன் அடிப்படையில் விடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததுடன் வேறு அரசகாணிகளை கடற்படை பயன்படுத்து மாறு கோரிகை விடுத்த போதிலும் கடற்படையினறால் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது
இருப்பினும் பாதிக்கப்பட மக்கள் சார்பாக ஆஜாராகிய பிரதிநிதிகள் எக்காரணத்த்கிற்காகவும் நாங்கள் பூர்விகமாக வாழ்ந்த காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது எனவும் எமத்கு காணிகளை பெற்று கொள்ளும் வரை நாங்கள் போராடபோவதாகவும் தெரிவித்துள்ளனர்
அதே நேரத்தில் விசாரணைக்கு என அழைக்கப்பட்ட வடமேல் கட்டளைதளபதி முள்ளிக்குளம் விசாரணையின் போது பிரசன்னம் ஆகியிருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.

கருத்து தெரிவிக்க