சம்பளம் மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளை முன்னிறுத்தி அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் இன்றயதினம் ஈடுபட்டிருந்தது.
அரச நிர்வாக அமைச்சினால் ஒருதரப்பினருக்கு மாத்திரம் கொடுப்பனவை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, குறித்த போராட்டம் முன்னெடுக்கபட்டுவருகிறது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 18 தொழிற் சங்கங்களின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதேவேளை குறித்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் இன்றயதினம் வேலை நிறுத்தபோராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.
குறிப்பாக வவுனியா மாவட்டசெயலகம், மற்றும் பிரதச்செயலகங்களில் கடமையாற்றும் பல்வேறு உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்றயதினம் கடமைக்கு சமூகமளிக்கவில்லை.
இதனால் பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச செயலாக்கங்களிற்கு வருகை தந்த பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம் கொடுத்திருந்தனர்.
இதேவளை வாகன அனுமதி பத்திரம் மற்றும் ஒரு சில சேவைகள் மாத்திரம் வவுனியா பிரதேச்செயலகத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க