அம்பாறை – பாலமுனைப் பகுதியில் இருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று, பாலமுனை ஒலுவில் துறைமுகத்திற்கு செல்லும் வீதிக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.
இது ரி 56 ரக துப்பாக்கி அதற்கான மெகசின், 30 தோட்டாக்கள், 7 டெடனேற்றர்கள், 4 ஜெலட்நைட் கூருகள், வயர்கள், யுரீயா, அமோனியா உள்ளிட்ட வெடிபொருட்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அம்பாறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க