ஸ்ரீ விஸ்வகர்மா ஜயந்தி தினக் கொண்டாட்டம் கோட்டைமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் புதன்கிழமை 18.09.2019 நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுகள் அதன் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின.
நிகழ்வில் ஆலயத்தில் சிரிஷ்டிக்கப்பட்டுள்ள பரப்பிரம்மம் ஸ்ரீ விஸ்வகர்மா உடனுறை ஸ்ரீ காயத்திரியம்மனுக்கு விசேட அபிஷேக பூஜையும் மலர் சொரிதலும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவலோகேஸ்வரக் குருக்களால் நடத்தி வைக்கபப்ட்டது.
ஆன்மீகக் கல்வி மேம்பாட்டு நிகழ்வாக அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமாக சுவாமி விவேகானந்தரின் சிரிக்கவும் சித்திக்கவும் என்ற நூலும் சுவாமி கமலாத்மானந்தரின் ஆன்மீகக் கதைகள் என்ற நூலும் அத்துடன் தெய்வ பக்திக் கதைகள், நல்வாழ்வுக்கான நாளொரு குறள் நூல்களும் வழங்கப்பட்டதோடு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பொது அறிவும் மனப்பாங்கும் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கருத்து தெரிவிக்க