உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இ.போ.ச சபையினர் பணிப்புறக்கணிப்பு; போக்குவரத்தில் பயணிகள் அசௌகரியம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் நேற்று முந்தினம் (16.09) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதனால் பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இ.போ.ச ஊழியர்களுக்கான 2006/30 , 2016/02 இலக்க சுற்றுநிருபத்தின் படி 2018.10.01 ஆம் திகிதியிலுருந்து தொடர்ந்து அமுல்படுத்தபடும் சம்பளம், இ.போ.ச ஊழியர்களின் அலுவலக சபையின் ஊழியர்களிற்கு செப்டெம்பர் மாதத்தில் இருந்து அடிப்படை சம்பளத்தில் உடனடியாக சேர்கப்படவேண்டும்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களிற்காக 2019 ஆம் ஆண்டு வரவு செலவுதிட்டத்தின் மூலம் சம்பள அதிகரிப்பு இடம்பெற்று ஒராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில் புதிய சம்பளமான.2500 ரூபாய் இந்த ஆண்டின் யூலை மாதத்தில் இருந்து வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களிற்கு நிரந்தர நியமனம் வழங்கபடல் வேண்டும்.

போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்களினால் நாடாளாவிய ரீதியில் குறித்த பணிபுறகணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா சாலை ஊழியர்களும் நேற்று ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌முந்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவதுடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் காண கூடியதாக இருந்தது.

தனியார் பேரூந்துகள் அதிகளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க