மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலய மாணவர்கள் தமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குமாறு கோரி இன்று(18) காலை பாடசாலையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
470 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையில் தரம் ஐந்துவரை வகுப்புகள் நடைபெறுகின்றன.
14 வகுப்புகளுக்கு 14 ஆசிரியர்களுக்கான தேவை இருக்கின்ற போதிலும் 11ஆசிரியர்களே கடமையில் உள்ளனர்.
இதனால் மூன்று வகுப்புகளைச் சேர்ந்த 110 மாணவர்கள் பாதிக்கப்கபட்டுள்ளதாக பாசாலை அதிபர் எம்.எம்.யூனூஸ் தெரிவித்தார்.
குறித்த இடத்திற்குவிரந்த கல்வி அதிகாரிகள் விரைவஜல் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதாக உறுதியளித்தனர்.
கருத்து தெரிவிக்க