பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை(16) காலை முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் போக்கு வரத்து சங்கம் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை முன்னைடுத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பாடசாலை மாணவர்கள்,அரச,தனியார் திணைக்கள பணியாளர்கள்,பொது மக்கள் என அனைவரும் பாதீப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் தனியார் போக்கு வரத்து சங்கத்தின் தலைவர் ரீ.ரமேஸ் தலைமையிலான குழுவினர் உடினடியாக கூடி பொது மக்கள் பாதிக்காத வண்ணம் சேவை மேற்கொள்ளும் வiயில் அவசர தீர்மானத்தை மேற்கொண்டனர்.
அந்த வகையில் மன்னாரில் இருந்து தோட்டவெளி, கரிசல் புதுக்குடியிருப்பு உள்ளிட்ட கிரமங்களுக்கான சேவைகள் தற்பொது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் கோரும் இடங்களுக்கு உடனடி போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏதாவது கிராமங்களுக்கு பயண போக்குவரத்து ஏற்பாடுகள் தேவைப்படின் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறும் மன்னார் தனியார் தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ரீ.ரமேஸ் மக்களிடம் வேணடுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க