” ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே எனது பிரதான கடமையாக இருக்கும்.” என்று சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கையொன்றின் ஊடாக இன்று அறிவிப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டுமாக இருந்தால், பங்காளிக் கட்சியின் ஆசிர்வாதமும் தனக்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயார் என சஜித் பிரேமதாசவும் ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
எனவே, இரகசிய வாக்கெடுப்பின்மூலமே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.
கருத்து தெரிவிக்க