உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மக்கள் ஆணைவழங்கினால் கிழக்கின் அரசியல் அடிமை விலங்கை உடைத்துக் காட்டுவோம்

கிழக்கின் தமிழர்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண வருடாந்த இடமாற்றம் தொடக்கம் அரசினால் நிர்வாக ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் சேவைகளுக்குகூட மாற்று அரசியல் தலைவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதனை மக்கள் நன்கு உணர்கின்றனர்.

என கிழக்குமாகாண சபை முன்னாள் உறுப்பினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ. பிரசாந்தன் தெருவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேசத்தின் பிரதேச, வட்டார, கிராமிய அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (16) பெரியபோரதீவு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொகுதிக் காரியாலயத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..

இஸ்லாமிய வகாப்பிய தீவிரவாதியின் உடல்பாகங்கள் தொடக்கம் வைத்தியசாலை கழிவுகளை அகற்றுவது வரைக்கும் மட்டக்களப்பின் நிருவாகத்திற்கும் மாவட்ட அரசியல் தலைமைகளுக்கும் உள்ள இயலாமையைக் காட்டி நிற்கின்றது.

நாங்கள் முதல் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைகப் புலிகள் ஆட்சிக்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்திலும் அரச அதிகாரிகளையோ, தமிழ் மக்களையோ அரசியல் பேதம் பார்த்தோ வர்க்க வேறுபார்த்தோ எந்த விடயத்திற்கும் தலைகுனிந்து மாற்று சமுகத்திடம் கையேந்தும் நிலையை தோற்றுவிக்க இடம் கொடுக்கவில்லை.

மீண்டும் மக்கள் எமக்கு ஆணைவழங்கினால் கிழக்கில் தமிழன் தமிழனாக வாழும் நிலையினை ஏற்படுத்திக் காட்டுவோம். என ஆணித்தனமாக குறிப்பிடுகின்றேன்.

போரதீவுப்பற்று பிரதேசம் பல புத்திஜீவிகளையும் கலைஞர்களையும் போராட்ட காலத்தில் துணிவுமிக்க போராளிகளையும் கிழக்கிற்கு வெளிக் கொண்டுவந்த பிரதேசமாகும் ஆனால் அந்த போராட்ட வகாப்பிஷம் அபிவிருத்திக்காக இன்றும் ஏங்கித் தவிக்கும் பிரதேசமாக காணப்படுவது வேதனைக்குரியது.

ஒரு சமுகத்தின் அத்திவாரம் கல்வி கலை கலாசார பொருளாதாரமாகும் வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் வறுமையுடன் போராடினால் எப்படி சமுகம் பற்றி சிந்திக்கமுடியும் அரசியல் பற்றி பேசமுடியும்.

வாழ்வாதாரத்தினை வலுவாக்கி போரதீவுபற்று உள்ளிட்ட அருகிலுள்ள பிரதேச பாடசாலைகளை இணைந்து படுவான்கரைக்கு மேலும் ஒரு தனியான கல்வி வலயங்களை உருவாக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

கல்வி வலுவாக்கத்தினை ஏற்படுத்தி எம் சமுகத்தின் வறுமை நிலையினை நீக்கி தமிழரின் நிலைபேறான இஸ்திரமான எதிர்காலத்தினை உருவாக்குவதில் திடமாகவுள்வோம் எனவும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க