உள்நாட்டு செய்திகள்

தேடுதலின்போது ஊடகவியலாளர்கள் வேண்டாம்

தேடுதல் நடவடிக்கைகளின் போது ஊடகவியலாளர்களை இணைத்துக்கொள்ளவேண்டாம் என்று ஜனாதிபதி மைத்ரிபால படைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்மூலம் பலரின் தனிப்பட்ட நலன்கள் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலர், பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்காதபோது சோதனை நடவடிக்கையின்போது ஏதாவது தடயப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு ஊடகங்களினால், பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது.

எனவே சோதனை நடவடிக்கைகள் முடிவடைந்ததும் ஊடகவியலாளர்களை அழைப்பது பொருத்தமானது என்று ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க