பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு ஏராளமான திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் கண்காணிப்பு குழுவின் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமது குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை அடிப்படையாகக்கொண்டு புதிய சட்டமூலம் தயாரிக்கப்படுவதை பலரும் எதிர்க்கின்றனர்.
இந்தநிலையில் திருத்தப்பட்ட சட்டமூலத்தின் சட்டநியாயத்தை அரசாங்கம், உயர்நீதிமன்றத்திடம் கோரவுள்ளதாகவும் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க