யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட கூலித்தொழிலாளி ஒருவரிடமிருந்தே இந்த நிதிமோசடி இடம்பெற்றுள்ளது. 50 ஆயிரம ரூபாய் ஆள்பிணை என்பது குற்றவாளி தேசிய அடையாள அட்டை பிரதியில் கையொப்பம் இட்டு வழங்கிச் செல்லலாகும்.
யாழில் கூழிலித்தொழிலாளி ஒருவர் சிறு குற்றம் ஒன்றை புரிந்தார் என்ற அடிப்படையில் நீதிமன்றில் முன்நிறுத்தப்பட்டார். அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கி வழக்கினை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், அந்த கூழிலித்தொழிலாளிக்காக வாதாடிய சட்டத்தரணி அவர் 50 ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டும் எனக் கூறி அப்பணத்தை மோசடி செய்துள்ளார். இது குறித்து சக சட்டத்தரணிகள் கவலை தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க