உலகம்

கொரோனா குப்பைகளால் மாசுபடும் கடற்படுகை– ஆர்வலர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் வந்து சில மாதங்களே ஆகின்றன. ஆனால் அதற்குள் மக்கள் பயன்படுத்தி விட்டு தூக்கியெறிந்த முகக்கவசங்கள் கையுறைகள் போன்றன மத்திய தரைக்கடல் பகுதியில் குப்பைகளாக குவிந்து கிடப்பதை பிரான்ஸின் ஒபரேசன் கிளீன் சி என்ற அமைப்பு காணொளி ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. அதில் மத்திய தரைக்கடலின் கடற்படுகை கொரோனா குப்பைகளால் மாசுபட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது.

அந்த அமைப்பின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான லோறண்ட் லொம்பேட், இந்த புது வகையான மாசடைதலை தவிர்ப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அத்தோடு இது வெறும் ஆரம்பம் தான் என எச்சரித்து இருக்கும் அவர், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முகக் கவசங்களை கொள்வனவு செய்ய இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் ஒரு பெரும் புயல் வரும்போது, ஏற்கனவே பாவித்து விட்டு எறிந்த அத்தனை முகக்கவசங்களும் கையுறைகளும் கடலுக்குள் சென்று சேரப் போகின்றன. என்று குறிப்பிடும் அவர், மிக விரைவில் மத்திய தரைக்கடலில் ஜெல்லி மீன்களை விட இந்த குப்பைகளே குவிந்து கிடக்கும் அபாயம் நேரிடப் போகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

முகக் கவசங்கள் மண்ணோடு மண்ணாக மட்கிப் போக 400 ஆண்டுகள் வரை ஆகும் என்பதோடு, அவை சுற்றுச் சூழலுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க