மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை ஒட்டி பாடசாலையின் சாதனை பயன விசேட தபால் தலை வெளியீட்டு நிகழ்வு மற்றும் சிறுவர் மாணவர் தலைவர்களுக்கான தினமும் பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ரொஜினோல்ட் தலைமையில் இன்று வியாழக்கிழமை பாடசாலையில் இடம் பெற்றது .
மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 150 வருட பூர்தியை முன்னிட்டு பாடசாலை சமூகம் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் சார்பாக பல்வேறு பட்ட கலாச்சார மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.
அந்த வகையில் 150 ஆண்டு சாதனை பயணத்தின் தேசிய அங்கிகாரத்திற்கு என விசேட தபால் தலையானது இலங்கை தபால் திணைக்கல முத்திரை விநியோக பணிப்பாளர் மீஹம மற்றும் தபால் திணைக்கல பிரச்சார பிரிவு அதிகாரி கே.கே.ஜே.பெரேரா முன்னிலையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் , சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலய கல்விபணிப்பாளர் பிறட்லி ,உட்பட ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நிர்வக உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்ட ரீதியில் வெளியீட்டு வைக்கப்படும் முதல் தபால் தலை இது என்பதும் குறிப்பிடதக்கது.
கருத்து தெரிவிக்க