உள்நாட்டு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீடு அவசியம்: பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை எனவும் மூன்றாவது நாடு ஒன்று தலையிட்டால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

மேலும், ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் வருடாந்திர கூட்டத்தில் காஷ்மீரில் இந்தியா மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியது.

பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா, காஷ்மீர் எங்கள் நாட்டின் உள்விவகாரம் எனவும் அதில் பிறர் தலையிடுவதை விரும்பவில்லை என பதிலடி கொடுத்தது.

இதற்கிடையில், காஷ்மீர் விவகாரத்தை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என ஐ.நா. தலைமை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க