நுகர்வுக்கு உதவாத 18 000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை – ஶ்ரீவிக்ரம மாவத்தை பகுதியிலுள்ள தனியார் நிறுவன களஞ்சியசாலை ஒன்றிலிருந்தே கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, அங்கிருந்த 2 நவீன தராசுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கழிவுத் தேயிலை மறைத்துவைக்கப்பட்டிருந்த களஞ்சியாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கருத்து தெரிவிக்க